சென்னை அணியில் இணைந்த இளம் வீரர்... இனி அதிரடி காட்டுமா தோனி படை?
நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
பேட்டிங்கில் சொதப்புவதே தொடரும் தோல்விகளுக்கு காரணம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மிடில் ஓவர்களில் அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாததும் சென்னை அணிக்கு பெரிய தடையாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக் கொண்டார்.
இந்தநிலையில் தற்போது இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் வெளியேறியுள்ளதாக சென்னை அணி அறிவித்துள்ளதுடன், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் போலவே பேட்டிங் ஸ்டையில் அவரிடம் உள்ளதால், டெவால்ட் பிரெவிஸ்-ஐ பேபி ஏபிடி என ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த நிலையில், பேபி ஏபிடியின் வருகை சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு உதவும் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.
இதேவேளை, சென்னை அணியானது பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.