ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? போட்டியிடும் மூன்று வீரர்கள்!
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலோ அல்லது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ன் இறுதிப் போட்டிக்கு முன்னேறா விட்டாலோ இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்.
அதுமட்டுமல்லாமல், ரோஹித் சர்மா பார்மில் இல்லை என்பதாலும், அவர் முன்பு போல் சிறப்பாக பேட்டிங் செய்வதும் இல்லை என்பதாலும், அதிகபட்சம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி அவர் இந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும்.
இந்த நிலையில், அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு இப்போது 37 வயதாகிறது என்பதால் ரோஹித் சர்மாவால் இந்திய அணிக்கு நீண்ட காலம் கேப்டனாக இருக்க முடியாது. எனவே தற்போது, மூன்று பேர் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
ரிஷப் பந்த்
இந்தியாவின் அடுத்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக வருவதற்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் ரிஷப் பந்த். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பந்த் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறார்.
அவருக்கு கேப்டன்சி அனுபவமும் ஏற்கனவே இருக்கிறது. அதனால் ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்ஷிப் ரேஸில் இருக்கிறார். இளம் வீரர் என்பதால் இந்திய அணியை நீண்ட தூரம் வழிநடத்துச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது.
சுப்மன் கில்
இந்தியாவின் அடுத்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக வருவதற்கு வலுவான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில். 25 வயதான சுப்மான் கில் பேட்டிங் திறமை பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை ஷுப்மான் கில்லின் பேட்டிங்கில் காணலாம்.
அவர் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட முடியும். அவருக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. அதனால், சுப்மன் கில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட முடியும். சுப்மான் கில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 பார்மேட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார். இதனால் இவர் அடுத்த இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஜஸ்பிரித் பும்ரா
இந்தியாவுக்கு புதிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனை நியமிக்க வேண்டும் என்றால், இப்போதைக்கு ஜஸ்பிரித் பும்ரா தான் முதல் சாய்ஸ். இந்திய அணிக்காக மூன்று பார்மேட்டுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் மட்டுமின்றி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
இவரது கேப்டன்சி பொறுப்பில் தான் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா 43 டெஸ்ட் போட்டிகளில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவுக்காக 70 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால், இவரைக் கூட இந்திய அணியின் அடுத்த கேப்டன்சி பொறுப்பில் பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது.