இங்கிலாந்தின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.

இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிக்க இருக்கின்றன.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். உடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார்.

அதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார். இதையடுத்து புதிய பிரதமர் பதவி ஏற்பார்.

போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்படுகிறது.

பிரெக்சிட் உடன்படிக்கை, போரிஸ் ஜான்சன் ,தெரசா மே , ஜெராமி ஹண்டு

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...

ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2007ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில்...

More Articles Like This