Bigg Boss Tamil 7: பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து இந்த வாரம் விழப்போகும் இன்னொரு விக்கெட் இவரா?
Bigg Boss Tamil 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பிய நிலையில், அதிரடியாக ஒரு எவிக்ஷன் மற்றும் ஒரு வாக்கவுட் என அட்டகாசமான துவக்கத்தை ஆரம்பித்துள்ளது.
Bigg Boss Tamil 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பிய நிலையில், அதிரடியாக ஒரு எவிக்ஷன் மற்றும் ஒரு வாக்கவுட் என அட்டகாசமான துவக்கத்தை ஆரம்பித்துள்ளது.
முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 18 பேர் இருந்த வீட்டில் தற்போது வெறும் 16 பேர் தான் இருக்கின்றனர் என்பதே ஷாக்கிங் செய்தி தான்.
இந்நிலையில், இந்த வாரம் நாமினேட் ஆன நபர்களில் இருந்து வீட்டை விட்டு வெளியே போகப்போகும் அந்த போட்டியாளர் யாராக இருப்பார் என்பது குறித்த கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு டாஸ்க்கும் செய்யாமலே டாட்டூ போட்ட அந்த அனன்யா ராவ் விசித்ராவுடன் சர்ச்சையில் எல்லாம் சிக்கி முகத்தை காட்டிய நிலையிலும், ரசிகர்களுக்கு அவர் எந்தவொரு சீரியலிலும் நடிக்காத நிலையில், அவரை துரத்தி அடித்து விட்டனர்.
மேலும், பவா செல்லதுரை வயதானாலும் பிக் பாஸ் வீட்டில் கெத்தாக விளையாடலாம் என நினைத்து உள்ளே வந்த நிலையில், இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த நல்ல பெயரை ஒரே வாரத்தில் கெடுத்துக் கொண்டதை உள்ளார அறிந்து கொண்ட நிலையில், அதிரடியாக வெளியே விட்ருங்க பிக் பாஸ் என அழுது புலம்பி வெளியேறி விட்டார்.
நமீதா மாரிமுத்து, ஜிபி முத்துவை தொடர்ந்து முதல் வாரத்தில் வாக்கவுட் செய்வதையே ஒரு ஸ்க்ரிப்ட்டாக பிக் பாஸ் டீம் பயன்படுத்தி வருகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகியிருக்கும் நபர்கள் என்று பார்த்தால், ஜோவிகாவும் அவருடன் சண்டை பிடித்த விசித்ராவும் நாமினேட் ஆகியுள்ளனர்.
மேலும், சிரித்தே சாவடிக்கும் பிரதீப் ஆண்டனி, தேவையில்லாமல் வம்பு சண்டைக்கு செல்லும் விஷ்ணு, கூல் சுரேஷ் என்னை தப்பா பார்க்குறாருன்னு கன்டென்ட் தேட நினைத்த மாயா, ஒண்ணுத்துக்கும் உதவாத லவ் டுடே அக்ஷயா மற்றும் அமைதியாக இருக்கும் அராத்தி பூர்ணிமா.
இதில், கருத்துக் கணிப்புகளில் மிக குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பது பூர்ணிமா மற்றும் மாயா தான். தேவையில்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிகமாக காசிப் பேசும் மாயாவை இந்த வாரம் வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்களின் வெறுப்பை அவர் அதிகமாக சம்பாதித்துள்ள நிலையில், வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.
விசித்ரா மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு திடீரென ஆர்மி ஆரம்பம் ஆகி விட்டதா தெரியவில்லை அதிக வாக்குகளுடன் முன்னணியில் உள்ளனர்.