இந்தியா - தென்னாப்பிரிக்கா நெடுந்தொடர் - யாருக்கு வெற்றி? முன்னாள் வீரர் என்ன சொல்றார்னு பாருங்க!
இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து சொல்லி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி மூன்றில் டி20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இருபதுக்கு 20 மற்றும் ஒரு நாள் தொடரில் இல்லாத நிலையில், இளம் வீரர்களை வைத்துக் கொண்டே தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி களமிறங்குகின்றது.
இந்த நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து சொல்லி உள்ளார்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வரை வந்தது. ஆனால் தற்போது சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் தென்ஆப்பிரிக்காவே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் தற்போது டெத் ஓவர்களில் பந்து வீச போதிய வீரர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார். பும்ராவும் இல்லாததால் இந்திய அணி இந்த தொடரில் நிச்சயம் பல சவால்களை சந்திக்கும்.
மொத்தம் எட்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஐந்து போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும் மூன்று போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெறும் என நினைப்பதாக கூறியுள்ள அவர், தன்னுடைய கணிப்பு தவறாகவும் செல்லலாம். அதனை இந்திய வீரர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்று அவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணியின் இளம் வீரர்கள் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என்றாலும், ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டால் தென்னாப்பிரிக்காவை அவர்களது சொந்த மண்ணில் இந்தியாவால் வீழ்த்த முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.