ஹர்திக் பாண்டியா நீக்கம்.. பிரசித் கிருஷ்ணா தேர்வு சரியா? அக்சர் படேலுக்கு பிசிசிஐ துரோகம் இழைத்ததா?

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரின் காணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் நடக்க கூட முடியாதல் மற்ற வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 

ஹர்திக் பாண்டியா நீக்கம்.. பிரசித் கிருஷ்ணா தேர்வு சரியா? அக்சர் படேலுக்கு பிசிசிஐ துரோகம் இழைத்ததா?

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது ஏன் என்பது பற்றி வாங்க பார்க்கலாம்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரின் காணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் நடக்க கூட முடியாதல் மற்ற வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 

அதன்பின் அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்கவே இல்லை. மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது. 

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது.

செமி பைனலில் இந்திய அணிக்கு காத்திருந்த ஆப்பு.. பாண்டியாவை கழட்டி விட காரணம் இதுதான்

ஆனால் காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

வழக்கமாக இந்திய அணியில் எந்த வீரர் காயமடைந்தாலும், அந்த ரோலை செய்யக்கூடிய மாற்று வீரர் தான் அறிவிக்கப்படுவார். ஆனால் பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட பிரசித் கிருஷ்ணா சொல்லிக் கொள்ளும்படி பேட்டிங் செய்ததில்லை. நியாயமாக பார்த்தால் ஆல்ரவுண்டரான அக்சர் படேலுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காயமடைந்த அவரின் நிலைமை குறித்தும் எந்த அப்டேட்டையும் பிசிசிஐ தரப்பில் வெளியிடவில்லை.

ஆனால் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் தரமான ஃபார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான 3 பேரில் ஒருவருக்கு காயமடைந்தாலும் இந்திய அணியின் நிலைமை திண்டாட்டம் தான். 

ஷர்துல் தாக்கூரை 3வது வேகப்பந்துவீச்சாளராக நம்பி களமிறக்க முடியாது. இதன் காரணமாகவே பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...