நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி பயணத்தை முடிக்குமா இந்தியா...!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முக்கிய லீக் ஆட்டமாக நியூசிலாந்துடன் இன்று தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்துகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி பயணத்தை முடிக்குமா இந்தியா...!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முக்கிய லீக் ஆட்டமாக நியூசிலாந்துடன் இன்று தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இரண்டு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இந்த போட்டி ஏற்படுத்தி இருக்கிறது. 

ஐசிசி உலகக் கோப்பை டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என இந்தியாவும் நியூசிலாந்து இதுவரை 9 முறை மோதி இருக்கிறார்கள்.

இதில் இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டும் தான் நியூசிலாந்தை தோற்கடித்து இருக்கிறது. எஞ்சிய எட்டு முறையும் நியூசிலாந்து அணியே வென்றிருக்கிறது. 

அதுவும் 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரையிறுதியில் எதிர்கொண்ட போது தோனியின் ரன் அவுட் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.அந்த தோல்வியின் மூலம் உலக கோப்பையில் வெல்லும் வாய்ப்பு இந்தியா தவற விட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்து அதே பலத்துடன் இருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

இதனால் இந்திய அணி நியூசிலாந்தில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான சாபத்தை முடிவுக்கு கொண்டுவர ரோகித் சர்மா, விராட் கோலி படை இன்று ஆட்டத்தில் பட்டையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் நியூசிலாந்தை எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தெரிந்த உடனே இந்தியாவின் சாபம் பின் தொடர்கிறது. இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது காயம் காரணமாக இடம் பெறவில்லை. 

மேலும் ஜடேஜாவுக்கும் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மாற்று வீரராக களமிறங்கக்கூடிய சூரியகுமார் யாதவுக்கும் பயிற்சி போது காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால் நியூசிலாந்து எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தெரிந்து உடனே அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி பயணத்தை ஐசிசி தொடருடன் இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...