பெண்ணுக்கு குளியலறையில் காத்திருந்த அதிர்ச்சி! 

சிங்கப்பூரில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு குளியலறையில் காத்திருந்த அதிர்ச்சி! 

சிங்கப்பூரில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தாய் செங்கில் உள்ள Strength Masters உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது .

இதனால் அச்சத்தில் உறைந்துபோன 26 வயதான Drealya Tan என்ற பெண், இரண்டு நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும், தனது  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பகிரப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் உடைந்துபோனதாகவும் கூறியுள்ளார்.

குளியலறையில் கதவுக்கு அடியில் ஒரு ஐபோன் கைபேசியை யாரோ நீட்டி வீடியோ எடுப்பதை தான் அவதானித்ததாகவும் கைபேசியின் கேமரா லென்ஸ் அவரை நோக்கி இருந்ததாக அவர் கூறினார்.

இதை கண்ட அவர், உதவி வேண்டி சத்தம் போட்டதாக கூறியுள்ளார், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார், ஏனெனின் அந்த நேரத்தில் பணியில் ஊழியர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பலமுறை ஜிம் ஊழியர்களை அழைக்க முயன்றதாகவும், என்ன செய்வதென்று தெரியாமல் அழுததாகவும் அவர் கூறினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp