பாலியல் துன்புறுத்தல்.. பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது பெண் கொடுத்த புகார் 

பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா கிருஷ்ணன் மீது பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்த தகவல் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்.. பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது பெண் கொடுத்த புகார் 

பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா கிருஷ்ணன் மீது பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்த தகவல் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. எப்போது ஒரு வீட்டில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டு வீடுகளில் நடக்கிறது. 

இதற்காக ரூல்ஸ்களும், டாஸ்க்குகளும் புதிதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. கேப்டனை கவர தவறிய ஆறு பேர்; ரூல்ஸை மீறியதற்காக இரண்டு பேர் என மொத்தம் எட்டு பேர் இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் இந்த வாரம் எந்த டாஸ்க்கிலும் கலந்துகொள்ள முடியாது.

 பிக்பாஸ் ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே வீட்டுக்குள் சண்டை மேகங்கள் சூழந்திருக்கின்றன. அதை ஆரம்பித்து வைத்தவர் பிரதீப் ஆண்டனி. சப்பாத்திக்கு குருமா என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை என ஆரம்பித்த அவருக்கு எதிராக கேப்டன் விஜய் வர்மா குரலை உயர்த்தியிருக்கிறார். அதேபோல் போட்டியாளர்களில் ஒருவரான மாயா கிருஷ்ணனும் பிரதீப் ஆண்டனியை சீண்ட ஆரம்பித்திருக்கிறார்.

இந்த சீசன் போட்டியாளர்களில் மாயா கிருஷ்ணனும் கடினமான போட்டியாளராக இருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அவரை பற்றிய பழைய விஷயம் ஒன்று மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. 

மாயா கிருஷ்ணன் அடிப்படையில் நாடக கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கென்று தனியாக நாடக குழு இருக்கிறது. நாடகம் மட்டுமின்றி வானவில், தொடரி, மகளிர் மட்டும், விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதாவது மாயா கிருஷ்ணன் மீது ஐந்து வருடங்களுக்கு முன்பு (2018) மாடல் அழகி அனன்யா என்பவர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "மாயா கிருஷ்ணனை 2016ஆம் ஆண்டு முதன்முறையாக சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயதுதான் ஆனது. 

அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். ஒருகட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகினோம். அப்போது நான் அவருடன் மட்டும்தான் பழக வேண்டும் என்ற ரீதியில் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.

எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுத்து என் மீது ஆதிகம் செலுத்தினார். அதேபோல் என்னுடைய பிற நண்பர்களையும் லாவகமாக துண்டித்தார். அதனால் அவர்கள் என்னை வெறுத்தனர். 

பொற்றோரையும் ஒதுக்க செய்தார். நிலைமை இப்படி இருக்க என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மேலும் பாலியால் ரீதியாகவும் பயன்படுத்தினார்" என்று கூறி பகீர் கிளப்பியிருந்தார்.

அனன்யா ஒரு பெண் மீதே பாலியல் புகார் கொடுத்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இதுகுறித்து மாயா, "என்னைப் பற்றி அனன்யா கூறியது அத்தனையுமே பொய். 

இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் மீது அவர் வேண்டுமென்றே அவர் அவதூறு கிளப்பியிருக்கிறார். அதனால் அவர் மீது வழக்கும் தொடுத்திருக்கிறேன்" என விளக்கமும் அளித்துவிட்டார். அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறியிருந்தது.

தற்போது மாயா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால் மீண்டும் அந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் சிலர் கிளப்பியிருக்கின்றனர். இருப்பினும் பிக்பாஸ் 7ல் உடை குறித்து விசித்திரா பேசியதற்கு மாயா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

மேலும் அவர் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறார் என அவருக்கென்று ரசிகர்களும் உருவாக ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இந்த பழைய விஷயத்தை பார்த்த அவர்கள் மாயா மீது தேவையில்லாமல் பழைய புகாரை வைத்து தவறான முத்திரை குத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறிவருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp