உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - பாகிஸ்தான், இலங்கைக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.

உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - பாகிஸ்தான், இலங்கைக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

2023 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் தனது கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

முந்தைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தான், புனேவில் நடைபெற்ற போட்டியில் மற்றொரு ஆசிய அணியான இலங்கை அணியை எதிர்கொண்டது. 

இலங்கை 241 ரன்கள் எடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் வெற்றிகரமாக சேஸிங் செய்து முடித்து போட்டியில் வெற்றி பெற்றது.

இத்துடன் தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எட்டு புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அந்த அணிகளை முந்தி அரை முதல் நான்கு இடங்களுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. 

அதனால் இனி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவதுடன் நெட் ரன் ரேட்டை முன்னேற்றுவதிலும் ஈடுபாட்டை காட்ட வேண்டும். ஆறு லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்தியா (12 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), நியூசிலாந்து (8 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (8 புள்ளிகள்) உள்ளன. 

ஆப்கானிஸ்தான் அணி தனது மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் பெற்று முதல் நான்கு இடங்களில் இடம் பெறலாம்.

ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கும் நிலையில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளிகளுடன் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் உள்ளன. 

வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன. 2019 உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணி கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp