தென்னாப்பிரிக்காவின் வெற்றியால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு போவதில் சிக்கல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க அணி தற்போது 47.62 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றியால் இந்திய அணி  இறுதிப்போட்டிக்கு போவதில் சிக்கல்!

தென்னாப்பிரிக்க அணியானது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் தேர்வு செய்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமதுல் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள்  சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், வங்கதேச அணி 106 ரன்களில் சுருண்டது. 

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியி முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் எடுத்த நிலையில், 202 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. 

வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்த நிலையில், 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அபாரமாக விளையாடி 22 ஓவர்களில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. 

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க அணி தற்போது 47.62 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் 7 டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தென்னாப்பிரிக்க அணி பைனலுக்கு வரவேண்டும் என்றால் எஞ்சி இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டில் தென்னாபிரிக்கா விளையாடுகிறது.

இதேவேளை, இலங்கையை பொறுத்தவரை எஞ்சியிருக்கும் நான்கு டெஸ்டில் மூன்றில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...