இந்திய அணியின் அதிரடி ஆட்டம்: ஆடிப் போன வங்கதேசம்.. மாஸ் காட்டும் ரோகித் படை!
இந்திய அணி 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த திட்டமிடல் மூலம் வங்கதேசத்தை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 376 ரன்கள் எடுத்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி விரைவில் வெளியேறினர்.
சேப்பாக்கத்தில் ரிஷப் பண்ட் சதம்: அதிரடியாக தகர்க்கப்பட்ட தோனியின் சாதனை!
இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர்.
உணவு இடைவேளைக்கு முன்பாக 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை மிரள வைத்தனர்.
பண்ட் 109 ரன்கள் எடுத்து வெளியேற அதேசமயம் சுப்மன் கில் 119 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணி 4 விக்கெட்களுக்கு 287 ரன்கள் எடுத்து, 515 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதனையடுத்து, வங்கதேச அணிக்கு வெற்றியோ தோல்வியோ என்ற கடினமான சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது.