இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை... அரையிறுதிக்கு தகுதிபெறுமா நியூசிலாந்து? 

இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை... அரையிறுதிக்கு தகுதிபெறுமா நியூசிலாந்து? 

உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி  இந்தியாவில் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 

இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.   மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. 

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியுற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். 

தொடர்ந்து நான்கு வெற்றிகளை பதிவு செய்து வந்த நியூசிலாந்து அணி, திடீரென பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. 

கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் சரியாக அமைந்தால் பந்துவீச்சில் சொதப்புகின்றனர். பந்துவீச்சு சரியாக அமைந்தால் பேட்டிங்கில் சோபிக்க தவறுகின்றனர்.

இரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 51 முறையும், இலங்கை அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 8 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் 

பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரம், போட்டி செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் களத்தில் சிறிது ஆதரவு கிடைக்கும்.

நியூசிலாந்து உத்தேச அணி:

டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் 

இலங்கை உத்தேச அணி:

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp