கம்பீரை விட சிறந்த பயிற்சியாளர் இவர்தான்.. இப்படி இருக்கணும்.. பாராட்டு மழையில் ஜெயசூர்யா!
இலங்கை அணி ஜாம்பவான் ஜெயசூர்யா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து தனது அணியை தொடர்ந்து வெற்றி பெற வைத்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோசமான சரிவை சந்தித்து வந்த இலங்கை கிரிக்கெட் அணி, 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இருந்தவரும், முன்னாள் இலங்கை அணி கேப்டனுமான சனத் ஜெயசூர்யா, தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணி ஜாம்பவான் ஜெயசூர்யா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து தனது அணியை தொடர்ந்து வெற்றி பெற வைத்து வருகிறார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கை அணியின் பயிற்சியாளராக ஜெயசூர்யாவும் நியமிக்கப்பட்டார்.
அப்போது, இந்தியா மற்றும் இலங்கை மோதிய ஒரு நாள் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்ற இலங்கை அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது.
அத்துடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்ற இலங்கை அணி, தற்போது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று இருக்கிறது.
அதேநேரம், கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்திய அணி சில வெற்றிகளை பெற்றது. எனினும், பல மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது.
இந்த நிலையில், இதையடுத்து சனத் ஜெயசூர்யா மற்றும் கம்பீரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு பயிற்சியாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பலரும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவை பாராட்டி தள்ளியுள்ளனர்.