கடைசி ட்விஸ்ட் வைத்த பங்களாதேஷ்.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான நாள்!

நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.

கடைசி ட்விஸ்ட் வைத்த பங்களாதேஷ்.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான நாள்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இதை விட மோசமான நாள் எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு எந்த பக்கம் போனாலும் அடி வாங்கி, இறுதியில் பங்களாதேஷ் அணியிடமும் தோல்வி அடைந்தது.

நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.

2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 7 போட்டிகளில் 5 மோசமான தோல்விகளை சந்தித்து இருந்தது. அதிலும் இந்திய அணிக்கு எதிராக 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. 

302 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை மாபெரும் தோல்வியை சந்தித்த அவமானத்தில் இலங்கை அரசு, கிரிக்கெட் அமைப்பு மீதான முந்தைய குற்றச்சாட்டுகளை எல்லாம் அடுக்கி, அந்த அமைப்பை கலைத்தது.

அதே நாளில், இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணியுடன் ஆட வேண்டி இருந்தது. அந்தப் போட்டி நடக்க இருந்த டெல்லியில் காற்று மாசு ஆபத்தான கட்டத்தில் இருந்தது. அதனால் சரியாக பயிற்சியில் கூட ஈடுபடாத இலங்கை வீரர்கள் போட்டியில் ஆட வந்தனர்.

அரை இறுதிக்கு செல்ல முடியாமல் போனாலும் புள்ளிப் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் இடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராபிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு வந்தது இலங்கை. அதற்கு பங்களாதேஷ் அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தது.

இந்த நிலையில், இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்த போது இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு வந்தார். அவர் கிரீசுக்கு வந்து நின்ற பின் ஹெல்மட் சரியாக அணிய முடியவில்லை என்பதால் வேறு ஹெல்மட் கேட்டு பெற்றார். ஆனால், இதற்குள் நீண்ட நேரம் ஆகிவிட்டது.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி சென்ற பின் 2 நிமிடத்திற்குள் அடுத்த பேட்ஸ்மேன் பந்தை சந்திக்க தயாராகி நின்று விட வேண்டும். ஆனால், மேத்யூஸ் இதை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டார். 

தப்புனா அந்த விதியை ஏன் வச்சிருக்கீங்க? டைம் அவுட் குறித்து திமிராக பதல் அளித்த ஷகிபுல் ஹசன்

இதை அடுத்து பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மேத்யூஸ் அவுட் என அம்பயரிடம் கோரினார். விதிப்படி அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். இதை அடுத்து மேத்யூஸ் கெஞ்சியும் ஷகிப் மற்றும் அம்பயர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறினார்கள். 

இதனால் இலங்கை அணிக்கு மேலும் இடி இறங்கியது போல ஆனது. இந்த சம்பவத்தால் இலங்கை அணி கோபத்தில் கொந்தளித்தது. முதலில் பேட்டிங் செய்து அசலங்க 108 ரன்கள் அடித்ததால் 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்தது இலங்கை.

அடுத்து பங்களாதேஷ் கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்தாலும் 41.1 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. உண்மையில் இலங்கை அணி மேத்யூஸ் சம்பவத்துக்கு பழி தீர்க்க வேண்டும் என நினைத்து இருந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

ஆனால், அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசனை 82 ரன்களிலும், ஷான்டோவை 90 ரன்களிலும் அவுட் ஆக்கி அவர்கள் சதம் அடிக்க முடியாதபடி செய்து பழி தீர்த்தார் மேத்யூஸ். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அமைப்பு தங்களால் கலைக்கப்பட்டது என்ற துயரம் ஒருபுறம், மேத்யூஸ் செய்த சிறிய தவறால் நேர்ந்த அவமானம், இரக்கமே காட்டாமல் ஷகிப் நடந்து கொண்ட விதம் மற்றும் இறுதியில் பங்களாதேஷ் அணியின் வெற்றி என இலங்கை அணி தன் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான நாளை சந்தித்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...