அஸ்வினுக்கு வாக்குறுதியளிக்க மறுத்த ரோஹித்: திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்!

ரோஹித் சர்மா ஒரு உத்திரவாதத்தை கொடுக்க மறுத்ததால்தான், அஸ்வின் திடீரென்று ஓய்வினை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அஸ்வினுக்கு வாக்குறுதியளிக்க மறுத்த ரோஹித்: திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே, ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

இன்னமும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளதுடன்,  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலும் ஜூன் மாதத்தில் இருக்கும் நிலையில், அது முடிந்தப் பிறகு அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம், அஸ்வின் இப்படி திடீரென்று ஓய்வுபெற்றதற்கு பின், ஏதோ காரணம் இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ரோஹித் சர்மா ஒரு உத்திரவாதத்தை கொடுக்க மறுத்ததால்தான், அஸ்வின் திடீரென்று ஓய்வினை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், 11 அணியில் அஸ்வினுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். அடுத்து, தனக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதி, முதல் டெஸ்ட் முடிந்த உடனே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், அடுத்து உங்களுக்கு ரெகுலராக வாய்ப்பு கிடைக்கும் என ரோஹித் சர்மா உத்தரவாதம் கொடுத்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் அஸ்வினுக்கு 11 அணியில் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி உட்பட பலரும் சொதப்பிய நிலையில், ஏதோ அஸ்வின் மட்டும் சொதப்பியதுபோல் கருதி, அவரை மூன்றாவது டெஸ்டில் இருந்து நீக்கினார்கள்.

அடுத்தடுத்த டெஸ்ட்களில், 11 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என ரோஹித் சர்மா உத்திரவாதம் கொடுத்ததால்தான், அஸ்வின் ஓய்வு முடிவினை தள்ளி வைத்திருந்தார். 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்டில், 11 அணியில் இருந்து நீக்கியதால்தான், அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இருந்தே வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட்களில், இப்படி அஸ்வினுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. 

தற்போதும், ஒரு போட்டியில் சேர்த்து, அடுத்த போட்டியில் நீக்கியதால்தான், அந்த அதிருப்தி காரணமாக அஸ்வின், மூன்றாவது டெஸ்டோடு ஓய்வு அறிவித்துவிட்டார் எனக் கருதப்படுகிறது.

அஸ்வினின் தந்தையும் இதே, விமர்னத்தை தான் முன் வைத்துள்ள நிலையில், அஸ்வின் இந்த விமர்சனத்தை மறுத்து, தனது தந்தைக்கு மீடியாவில் எப்படி பேச வேண்டும் எனத் தெரியாது, அவரை மன்னித்துவிடுங்கள், அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp