ஐசிசி சிறந்த வீரர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள்... யாருக்கு விருது?

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். 

ஐசிசி சிறந்த வீரர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள்... யாருக்கு விருது?

ஒவ்வொரு ஆண்டும் ஐசிசியால் வழங்கப்பட்டு வரும் சிறந்த வீரருக்கான விருதின் இறுதி பரிந்துரை பட்டியலில் 2 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் என்று 4 வகையான விருதுகள் வழங்கப்படும். 

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை அஸ்வினும், அதிக ரன்களை உஸ்மான் கவாஜாவும் சேர்த்துள்ளனர். 

ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, சுப்மன் கில், முகமது ஷமி மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் உள்ளனர். 
விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் 765 ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் கடந்த ஆண்டில் மட்டும் 1,584 ரன்களை விளாசியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி போட்டியில் உள்ளார். 

டி20 கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா நாட்டின் ராம்ஜானி ஆகியோர் உள்ளனர். 

டி20 உலகக்கோப்பை தொடருக்கு உகாண்டா அணி முதல் முறையாக முன்னேறியுள்ள நிலையில், அதில் ராம்ஜானியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ராம்ஜானி இருவரில் ஒருவர் வெல்வார் என்று கூறப்படுகின்றது.

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். 

2023ல் விராட் கோலி 2067 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் டிராவிஸ் ஹெட் நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சதங்களை விளாசி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங், பேட்டிங், கேப்டன்சி என்று ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். இதனால் யாருக்கு விருது வழங்கப்படும் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp