கோடிகளில் இழந்த தோனி... சிஎஸ்கே அணிக்காக செய்த தியாகம்... நடந்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத உள்ளூர் வீரர் என்ற பிரிவின் கீழ் தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், தற்போது 12 கோடி வாங்கி வரும் தோனி அதில் 8 கோடியை இழக்க நேரிடுவதுடன், அவரது சம்பளம் நான்கு கோடியாக குறையும்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் தோனியால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற சூழ்நிலை உள்ளதுடன், தோனி இருந்தால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.
அதேநேரம், தோனியை மெகா ஏலத்துக்கு முன்னதாக தக்க வைத்தால் 12 கோடி சம்பளம் அல்லது பிசிசிஐ அறிவிக்கும் கூடுதல் சம்பளத்தை அளிக்க வேண்டி வரும்.
அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் கையிருப்பில் குறிப்பிட்ட அளவு தொகை தோனியின் சம்பளத்துக்கு சென்று விடுவதால், ஏலத்தில் புதிய வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால், தன்னை உள்ளூர் வீரராக குறைந்த சம்பளத்துக்கு தக்க வைக்க முடிந்தால் மட்டுமே 2025 ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யுங்கள் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு தோனி கூறி இருக்கின்றார்.
தோனி விளையாடினால் மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என்பதால் பிசிசிஐ-யும் 2021க்கு முன் வரை இருந்த உள்ளூர் வீரர் விதியை மீண்டும் கொண்டு வர உள்ளது.
அதன்படி ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் உள்ளூர் வீரராக அறிவிக்கப்படுவார். அவருக்கு அதிகபட்சமாக 4 கோடி வரை சம்பளம் கொடுத்தால் போதுமானது.
அதனால், தோனி சிஎஸ்கே அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி விட்டதாக பார்க்கப்படுகின்றது.