கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஓய்வு முடிவை எடுக்க போகும் புஜாரா!

புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஓய்வு முடிவை எடுக்க போகும் புஜாரா!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான புஜாராவுக்கு உள்ளூர் போட்டிகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க இருக்கிறார். 

புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.

இந்திய அணி தற்போது வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட், மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.

இந்த நிலையில், புஜாரா போன்ற அனுபவ வீரர்களை இளம் அணியுடன் சேர்த்து ஆஸ்திரேலிய தொடருக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனக் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் 7195 ரன்கள் அடித்துள்ளார், இதில் அதிகபட்சம் 206 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் 25 டெஸ்ட் போட்டிகளில் 2074 ரன்கள் அடித்துள்ளார், இதில் 5 சதமும், 11 அரை சதமும் உள்ளன.

இந்நிலையில், துலிப் கோப்பையில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால், அவர் இராணி கோப்பையிலும் சேர்க்கப்படாமல் போவது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் நிர்வாகம் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியதால், புஜாரா போன்ற வீரர்களுக்கு எதிர்காலம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக கருதப்படுகிறது. அத்துடன்,  அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...