அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் உடல்நிலை மோசமாகியுள்ளதால், அவரை பார்க்க அவசர அவசரமாக சென்னை திரும்புவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி 15 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.
3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரவிச்சந்திரன் அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ள நிலையில், அஸ்வினின் குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகிகளில் ஒருவரான ராஜிவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில், அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன், அஸ்வின் தனது தாயாருடன் இருக்க ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகி சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக கூறிள்ளதால், அஸ்வினின் தாயாரின் உடல்நிலை மோசமாக இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.