கோட்டை விட்ட பாபர் அசாம்... பாகிஸ்தான் செஞ்ச அந்த 5 தவறு இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.

கோட்டை விட்ட பாபர் அசாம்... பாகிஸ்தான் செஞ்ச அந்த 5 தவறு இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி உஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று அரை இறுதி வாய்ப்பை இழந்து இருக்கிறது. பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி தொடரில் இருந்தே வெளியேறி இருக்கும் நிலையில் அந்த அணி என்ன தவறுகள் செய்தது என விமர்சகர்கள் பட்டியல் போட்டு உள்ளனர்.

அணித் தேர்வில் செய்த சொதப்பல் தான் பாகிஸ்தான் அணி செய்த முதல் தவறு என்றும் அதன் பின் பெரிய அரசியலும் உள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டுமின்றி இருக்கும் வீரர்களை திறம்பட பயன்படுத்தாமல்  கேப்டன் பாபர் அசாம் சொதப்பியதுடன், ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணி பழைய பாணியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அணியில்  ஒவ்வொரு போட்டியின் போதும் யாரை ஆட வைப்பது என்பதில் குழப்பம் நீடித்தது. அதிரடி துவக்க வீரர் ஃபாக்கர் ஜமானை நீக்கி விட்டு, தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் தன் உறவினரான இமாம் உல் - ஹக்கை துவக்க வீரராக களமிறக்கினார். 

அதனாலேயே முதல் சில போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஜமான் மீண்டும் அணிக்கு திரும்பிய உடனேயே பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிகளை பெற்றது.

நெதர்லாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய  சிறிய மற்றும் பலவீனமான அணிகளையே பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜமான் ஆடிய ஆட்டத்தால் வெற்றிப்பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பலமான அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.

பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில பேட்ஸ்மேனைகளை நம்பியே இருக்கு பாணியை கடைபிடித்து ஆடி வருகிறது. துவக்க வீரர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடுவதே இல்லை. அதனால், சிறந்த பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் முதல் 10 ஓவர்களிலேயே களத்துக்கு வர வேண்டிய நிலை உள்ளது. அவர் ஆட்டமிழந்து சென்றால், முகமது ரிஸ்வானை தவிர வேறு எந்த வீரரும் இல்லை.

ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்... ஒரு சதம் கூட அடிக்காமல் செல்லும் பாபர் அசாம்!

பாகிஸ்தான் நாட்டு அரசியலில் பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது. கேப்டன் பாபர் அசாம், சில முக்கிய வீரர்கள், பயிற்சியாளர் குழுவை தவிர பல வீரர்கள் இந்த நிர்வாக மாற்றத்தால் மறைமுகமாக அணியில் தங்கள் வாய்ப்பை இழந்தனர்.

எந்த சூழ்நிலை இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியவர் கேப்டன். ஆனால், அவரோ அரை இறுதிக்கு போக கடும் முயற்சி எடுக்க வேண்டிய இங்கிலாந்து போட்டிக்கு முன் ஷாப்பிங் சென்று இருக்கிறார். போட்டியின் போது கூட அவர் தன் சக வீரர்களிடம் முகம் கொடுத்து பேசி அவர்களை உற்சாகப்படுத்துவதில்லை. 

அணித் தேர்வில் பிடிவாதமாக இருந்து சிறந்த வீரர்களை கேட்டுப் பெறுவதில்லை. பீல்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது என பல விஷயங்களிலும் பாபர் அசாம் கோட்டை விட்டார் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp