காத்திருக்கும் இமாலய சாதனை.. இமயத்தை தொடுவாரா கோலி?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் ஆரம்பிக்கின்றது.

காத்திருக்கும் இமாலய சாதனை.. இமயத்தை தொடுவாரா கோலி?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் ஆரம்பிக்கின்றது.

முன்னதாக நடைப்பெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன், இந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்கவில்லை.

சூப்பர் 8 சுற்றுக்கு சென்றால் இந்திய அணி யாருடன் மோதும் தெரியுமா? ஆபத்தான அந்த மூன்று அணிகள்!

அத்துடன், அமெரிக்காவுக்கு வந்த விராட் கோலி எந்த ஒரு பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்றும் போட்டிக்கு சிறிய இடைவெளி இருப்பதால் நியூயார்க் மைதானத்தில் பயிற்சி செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நேரடியாக டி20 உலக கோப்பையில் களமிறங்க உள்ள விராட் கோலி முன்னால் மிகப்பெரிய சாதனை காத்திருக்கிறது. விராட் 
அதாவது, டி20 கிரிக்கெட்டில் கோலி 265 ரன்கள் எடுத்தால் மாபெரும் சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.

2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 391 போட்டிகளில் விளையாடி 12735 ரன்கள் குவித்துள்ளதுடன், இன்னும் 265 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைப்பார்.

அத்துடன், உலக அளவில் டீ 20 கிரிக்கெட்டில் 13000 ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைக்கும்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 463 டி20 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் அடித்திருக்கிறார். பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக் 542 டி20 போட்டிகளில் விளையாடி 13,360 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாம் இடத்தில் உள்ள பொலார்ட் 660 டி20 போட்டிகள் விளையாடி 12900 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில், விராட் கோலிக்கு பொலார்டை முந்தி மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...