மீண்டும் கேப்டனாக களமிறங்கும் கிங் கோலி? கம்பீர் பச்சைக்கொடி... பிசிசிஐ பேச்சுவார்த்தை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் கிங் கோலி? கம்பீர் பச்சைக்கொடி... பிசிசிஐ பேச்சுவார்த்தை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகின்றது.

இதனையடுத்து, இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சில வீரர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்றும் அதற்கு தனிப்பட்ட காரணங்கள் தான் காரணம் என்றும்,  ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாகவே ரோஹித் சர்மா அதனை செய்து முடித்தால், 5 போட்டிகளிலும் விளையாடுவதில் சிக்க இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக யாரை பிசிசிஐ கேப்டனாக நியமிக்கவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரின் போது கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன், கொரோனா பாதிப்பு காரணமாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பை ஏற்றார். அத்துடன், ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக சில தொடர்களில் விளையாடி உள்ளார்.

இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் மூவரின் தலைமையில் இந்திய அணி பெரியளவில் வெற்றிகளை பெற்றதில்லை என்பதால், பிசிசிஐ நிர்வாகிகள் விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2022ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் விராட் கோலி எந்த அணிக்கும் கேப்டனாக செயல்படவில்லை என்பதுடன், இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றி, 11 டிரா மற்றும் 17 தோல்வியை பெற்றிருக்கின்றார்.

சுமார் 59 சதவிகிதம் வெற்றி கணக்கை வைத்துள்ள விராட் கோலியை போல இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த கேப்டனுக்கு இப்படியொரு ரெக்கார்ட் இருந்ததில்லை. 

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் இருந்து வரும் அழுத்தத்தை விராட் கோலி போன்ற ஒருவரால் எளிதாக சமாளிக்க முடியும் என்பதால், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக விராட் கோலியிடம் கேப்டன்சியை ஏற்க பேச்சுவார்த்தை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், விராட் கோலியை கேப்டனாக்குவதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் ஆதரவு தந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp