ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா? ஆப்கானிஸ்தான் வீரரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

ஆஸ்திரேலியா விளையாடவில்லை என்றால் இரண்டு புள்ளிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து விடும்.

ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா? ஆப்கானிஸ்தான் வீரரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு தெரிவாகும் அணிகள் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.  8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஏழாம் தேதி மோதவுள்ளனர். இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இது இவ்வாறு இருக்க, ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் வெளியிட்டுள்ள கருத்து மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில்  
மகளிர் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆப்கானிஸ்தானுடன் தாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணி அறிவித்துதொடரை ரத்து செய்தது. 

இதனை தற்போது சுட்டிக்காட்டியுள்ள ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் இருதரப்பு தொடரை சில காரணத்தைக் காட்டி உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாக எங்களுடன் விளையாடுவார்களா? இல்லையா? என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவரின் கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிஇன்னும்  உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடுமா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலியா விளையாடவில்லை என்றால் இரண்டு புள்ளிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து விடும்.

முன்னதாக, 1996 உலக கோப்பையில் இலங்கைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்து 2 புள்ளிகளை இழந்திருந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவு இருக்கலாம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp