ஆஸ்திரேலியாவுக்கு பீதியை கொடுத்த நீஷம்.. கடைசி 2 பந்தில் ட்விஸ்ட்.. செம மேட்ச்!

அந்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் சிக்சர் அடித்து அசரடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 

ஆஸ்திரேலியாவுக்கு பீதியை கொடுத்த நீஷம்.. கடைசி 2 பந்தில் ட்விஸ்ட்.. செம மேட்ச்!

உலகக்கோப்பை தொடரில் சமபலம் கொண்ட அணிகளான நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் குவித்தது. 

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - யங் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்டார்க்கின் அபாரமான கேட்ச்சால் கான்வே 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அவரைத் தொடர்ந்து வில் யங் 32 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் கூட்டணி இணைந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய மிட்செல் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேற, இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய ரச்சின் ரச்சின் 49 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். 

இதன்பின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி தேவையான நேரத்தில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். ஆனால் மறுமுனையில் டாம் லேதம் 21 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனால் இதனை பற்றி கவலைப்படாமல் மறுமுனையில் ஆடிய ரச்சின் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி 77 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதனால் 40 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 290 ரன்களை கடந்தது. 

ஆனால் ஆட்டத்தை முடித்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் 89 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 293 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

உலகக்கோப்பை - ஆஸ்திரேலியா செய்த மெகா சொதப்பல்.. 8 பந்தில் 4 விக்கெட்டை தூக்கிய நியூசிலாந்துஉலகக்கோப்பை - ஆஸ்திரேலியா செய்த மெகா சொதப்பல்.. 8 பந்தில் 4 விக்கெட்டை தூக்கிய நியூசிலாந்து

பின்னர் வந்த சான்ட்னர் 17 ரன்களிலும், ஹென்ரி 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் நீஷம் தனியாளாக அதிரடியில் களமிறங்கினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 

அந்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் சிக்சர் அடித்து அசரடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 

அதில் இரண்டாவது பந்தை ஒய்டாக வீசியதால், நியூசிலாந்து அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது. இதனால் 5 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

அதில் 3 பந்துகளில் நியூசிலாந்து அணியின் நீஷம் 6 ரன்கள் சேர்க்க, 5வது பந்தில் 58 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ரன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. 

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp