வணிகம்

பாண் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்து

பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 2 ரூபாயால் அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, பழைய விலையிலேயே பாணை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அடுத்து பாணின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை, இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...

குறைத்து ஏற்றப்பட்டது எரிபொருள் விலை

92 ஒக்டைன் பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மாத்திரமே குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது. ஒக்டைன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒக்டைன் 95 ரக பெற்றோல் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் 92 ரக பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மாத்திரமே குறைக்கப்படுவதாக...

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் என்பன 2 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. உலக சந்தையில் நிலவும்...

பாணின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 கிராம் எடை கொண்டா பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய,...

நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

நாணய மாற்று விகிதம் – 29.08.2019

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 182.1527 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினம் (28) ரூபாய் 181.4619 ஆக பதிவாகியிருந்தது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29.08.2019) நாணய மாற்று விகிதம் நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 118.9111-123.8163 கனடா...

பாணின் விலைமாற்றம் ரத்தானது

5 ரூபாயால் பாணின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, மீண்டும் பழைய விலையிலேயே பாணை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோதுமை மா ஒரு கிலோகிராம் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

  இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முதல், கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்பது குறித்து, பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவியால் குறைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...