தலைப்புச் செய்திகள்

 • Photo of அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

  மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் இன்று (27) முற்பகல் 11 மணி மரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், அன்னாரின் பூதவுடல் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. அதனையடுத்து, இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியை…

  Read More »
 • Photo of அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்

  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும். மறுநாள் (29)…

  Read More »
 • Photo of ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்

  ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்

  மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள், 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி பொதுமக்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், இன்று (27) முற்பகல் 11 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரது இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு…

  Read More »
 • Photo of மலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு! யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..?

  மலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு! யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..?

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55 ஆவது வயதில் நேற்று(26) காலமானார். கொழும்பு – தலங்கம வைத்தியசாலையில் திடீர் உடல்நலக் குறைவினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகியுள்ளார். அவரின் மறைவு மலையக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி அறிந்ததை அடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தலங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பு என, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

  Read More »
 • Photo of அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment…

  Read More »
 • Photo of நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

  நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

  இன்று (26) முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது. இதனையடுத்து, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களிலும் பயணிகள் போக்குவரத்தின் போதும் சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

  Read More »
 • Photo of கொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்

  கொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 10ஆவது மரணம் பதிவாகியுள்ளதுஃ குவைத்திலிருந்து நாடுதிரும்பிய நிலையில், திருகோணமலை இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பெண், கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்தமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil…

  Read More »
 • Photo of திருமண நிகழ்வில் எத்தனை பேர் பங்கேற்கலாம் தெரியுமா?

  திருமண நிகழ்வில் எத்தனை பேர் பங்கேற்கலாம் தெரியுமா?

  திருமண நிகழ்வில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 100 பேராக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது, பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், வைபவங்களின் போது முக கவசம் அணிவதும் அவசியம் என, சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம்…

  Read More »
 • Photo of குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

  குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

  ஹட்டன், டிக்கோயா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். டிக்கோயா தோட்டத்தில் இன்று (25) முற்பகல் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா என்பரவே உயிரிழந்தவாராவார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 8 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். குறித்த 8 பேரும் வைத்தியசாலையின் அவசர…

  Read More »
 • Photo of ‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’

  ‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’

  ‘கொரோனா என்பது, கோடையில் வரும் அம்மை நோய் போன்றது தான்; யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலில், டாக்டர்கள் இதை நன்கு புரிந்து, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். நம் உணவு முறைகளால், நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது; தைரியமாக இருந்தால் போதும்; கொரோனாவை விரட்டி விடலாம்’ என, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை பெண் மருத்துவர், சமூக வலைதளம் வாயிலாக, நம்பிக்கையூட்டி உள்ளார், தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் மட்டுமின்றி, மருத்துவர்களிடமும், அச்ச உணர்வு…

  Read More »
 • Photo of இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்

  இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்

  கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமான சேவையை இன்று முதல் இந்தியா ஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று ஆரம்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, லக்னோ, டில்லி , கல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை ஆரம்பித்துள்ளது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர். மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள், விமான நிலையம்…

  Read More »
 • Photo of பசிக்கொடுமை… செத்து போன நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளர்…

  பசிக்கொடுமை… செத்து போன நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளர்…

  காதடைக்கும் பசியால், வீதியில் செத்து கிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் பிய்த்து எடுத்து சாப்பிடுகிறார். அந்த நபரின் வீடியோ வெளியாகி நெஞ்சை உலுக்கி எடுக்கிறது. இந்தியா முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு காரணமாக நிறைய பேருக்கு வேலை இல்லை. ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்னொரு வீடியோ வெளியாகி எல்லோரையும் நிலைகுலைய வைத்துள்ளது. ராஜஸ்தானில் பிரதுமான் சிங் நருகா என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்து இருக்கிறார். அப்போதுதான் அந்த கோர காட்சியை கண்டு நடுங்கி போய்விட்டார். நருகாவின் கண்களில் தாரை தாரையாக…

  Read More »
Back to top button
x
Close
Close