அரசியல்

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வேட்பாளரைத் தெரிவு செய்வது செயற்குழுவென்பதால், செயற்குழு கூடி விரைவில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனுக்குடன்...

ஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் முக்கிய சந்திப்பு

வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர். நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஐதேகவின் பிரதி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புபவருமான சஜித் பிரேமதாச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...

நள்ளிரவு வரை நீடித்த சந்திப்பு

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக ரணவக்க, தமிழ் முற்போக்கு...

தேசிய பட்டியல் உறுப்பினரானார் சாந்த – வர்த்தமானி வௌியானது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்திருந்தார். முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்...

சிறுபான்மை கட்சி உறுப்பினர்களுடன் சஜித் முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை இன்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாச சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறுபான்மை கட்சிகளின் இணக்கப்பாடுகளை பெற்றுகொண்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று...

‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளின்...

பேச்சுவார்தையின் பலன்களை விரைவில் பார்க்கலாம் -அமைச்சர் சஜித்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் இவ்வாறான...

ரணில்- சஜித் இன்று சந்திப்பு?

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில்...

‘ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை’

ஒரே நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண வடக்கு கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர்...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என பிரதமருக்கு இன்று (09) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தொலைநகல் மூலமாக இந்த உத்தரவு பிரதமர்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...