வடக்கு – கிழக்கு

 • Photo of ஒரே சூலில் மூன்று சிசுக்கள் பிரசவம்

  ஒரே சூலில் மூன்று சிசுக்கள் பிரசவம்

  அம்பாறை – கல்முனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே சூலில் 03 சிசுக்களை, நேற்று (21) பிரசவித்துள்ளார். சத்திர சிகிச்சை மூலம் ஒரே சூலில் பெறப்பட்டுள்ளதுடன் 03 ஆண் சிசுக்களும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கோமாரி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் பிரசவித்த சிசுக்கள் தலா 1,800 கிராம், 2,190 கிராம், 2,240 கிராம் நிறையுடன் பிறந்துள்ளன. சத்திர சிகிச்சையை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்தியக் குழுவினர் மேற்கொண்டனர். இதே வைத்தியசாலையில்…

  Read More »
 • Photo of பிறந்த குழந்தையை மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய்

  பிறந்த குழந்தையை மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய்

  பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய், அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ள நிலையில், சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் அவர் வீசியுள்ளார். சிசுவின் உடல் அழுகிய நிலையில் அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை…

  Read More »
 • Photo of கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் மீதான தீர்ப்பில் திடீர் திருப்பம்

  கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் மீதான தீர்ப்பில் திடீர் திருப்பம்

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

  Read More »
 • Photo of நினைவேந்தலுக்குச் சென்ற விக்கி திருப்பி அனுப்பப்பட்டார்

  நினைவேந்தலுக்குச் சென்ற விக்கி திருப்பி அனுப்பப்பட்டார்

  (யாழ் நிருபர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு தடுத்து ழைவக்கப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளனர். விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்துப் பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச்…

  Read More »
 • Photo of தனிமைப்படுத்தலுக்கு எதிராக நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

  தனிமைப்படுத்தலுக்கு எதிராக நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

  தம்மை தனிமைப்படுத்துமாறு விதிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் 11 முக்கியஸ்தர்களின் பெயர் குறிப்பிட்டு, அவர்களை தனிமைப்படுத்தும்படியும், அஞ்சலி நிகழ்வை நடத்த தடை கோரியும் யாழ்ப்பாண பொலிஸார் நேற்று மனு தாக்கல் செய்தனர். பொலிஸாரின் மனுவை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம், அவர்களை தனிமைப்படுத்தும்படி 5 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதற்கான அறிவித்தல் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (18) காலையில் சம்பந்தப்பட்ட 11 பேர்…

  Read More »
 • Photo of துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திர குமார்

  துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திர குமார்

  யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வைத்தியசாலைக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் , இளைஞனை பார்வையிட்டார் இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞள், கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை…

  Read More »
 • Photo of வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 180 பேர் வெளியேறினர்

  வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 180 பேர் வெளியேறினர்

  இலங்கை விமானப்படையின் வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 180 பேர் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு இன்று (15) திரும்பியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also…

  Read More »
 • Photo of காணியை துப்புரவு செய்த போது வெடிபொருள் மீட்பு

  காணியை துப்புரவு செய்த போது வெடிபொருள் மீட்பு

  முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் காணியை துப்புரவு செய்த போது ஆர்பிஜி செல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது சிவநகர் நகர் பகுதியை சேர்ந்தவர் தனது காணியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணிக்குள் குறித்த செல் இருப்பதை அவதானித்துள்ளார். அத்துடன், அது தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் தவசீலன் செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World…

  Read More »
 • Photo of வவுனியா வைத்தியசாலையில் கத்தியுடன் ஒருவர் கைது

  வவுனியா வைத்தியசாலையில் கத்தியுடன் ஒருவர் கைது

  வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் சிறியளவிலான கத்தி ஒன்றினை வைத்திருந்த குற்றசாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (14) மாலை இருதரப்புக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்தில் அவர்களது உறவினர்கள் சிலர் ஒன்றுகூடியிருந்தனர். இந்த நிலையில் வைத்தியசாலை வளாகத்துக்குள் கத்தியுடன் ஒருவர் நிற்பதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல்…

  Read More »
 • Photo of யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

  யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

  யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்துள்ளார். “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடிப்பட்டு காயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவேளை, இளைஞன் மோட்டார்…

  Read More »
 • Photo of நாடு திரும்ப முடியாமல் இந்திய புடவை வியாபாரிகள் தவிப்பு

  நாடு திரும்ப முடியாமல் இந்திய புடவை வியாபாரிகள் தவிப்பு

  கொரோனா வைரஸ் தாக்கத்தால் விமான சேவைகள் முடக்கப்பட்டமையால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புடவை வியாபாரத்துக்காக வந்த வியாபாரிகள் பலர், மீண்டும் தமது சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். தங்கள் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமலும், பல அடிப்படைத் தேவைகளன்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பழுகாமம், திக்கோடை கிராமங்களில் தனியார் வீடுகளில் தங்கியுள்ள மேற்படி வியாபாரிகள், அவர்களுக்கான நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இலங்கை அரச உத்தியோகபூர்வ விசாவைப் பெற்று, இலங்கைக்கு வந்து, வீடு வீடாகச் சென்று…

  Read More »
 • Photo of குழியில் தவறி வீழ்ந்து சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு அதிர்ச்சி சம்பவம்

  குழியில் தவறி வீழ்ந்து சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு அதிர்ச்சி சம்பவம்

  பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற 3, 6 வயதுடைய சிறுவர்கள் இருவர், கிணறு போன்ற பாதுகாப்பற்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளனரென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு – 3 பகுதியில், நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், சிராஜ் சிபாம் (வயது 6) சிராஜ் ரிஸ்ஹி (வயது 3) ஆகிய சகோதரர்களே மரணித்துள்ளனர். சிறுவர்களது சடலங்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு, இன்று (10) சென்ற பொலிஸ் குழுவினர்,…

  Read More »
Back to top button
x
Close
Close