ஆன்மீகம்

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும்.

 • Photo of கனவுகள் நம் எதிர்காலத்தின் எச்சரிக்கைகள்..!

  கனவுகள் நம் எதிர்காலத்தின் எச்சரிக்கைகள்..!

  நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..? நெருப்பு அடிக்கடி கனவில் வந்தால் ஏதோ உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். தண்ணீர் கனவில் வந்தால் வாழ்க்கையில் ஏதோ சுத்திகரிப்பு அல்லது தீமைகள் சரிசெய்யப்பட்டு தீர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். பெண்கள் கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு கண்டால் ஏதோ வாழ்க்கையில் சாதகமான ஒன்று…

  Read More »
 • Photo of உங்கள் கனவில் இவையெல்லாம் வந்தால், கோடீஸ்வரர் ஆவது உறுதி

  உங்கள் கனவில் இவையெல்லாம் வந்தால், கோடீஸ்வரர் ஆவது உறுதி

  உங்கள் கனவில் இவையெல்லாம் வந்தால், கோடீஸ்வரர் ஆவது உறுதி நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை நமக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது கனவு என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதிகாலையில் காணும் கனவானது கட்டாயம் பலிக்கும் என்றும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியிருக்க கனவில் நல்ல விஷயங்கள் வந்தால் பரவாயில்லை. அதுவே நமக்கு கெடுதல் நடப்பது போன்ற கனவை கண்டு விட்டோமேயானால், இருக்கும் மனநிம்மதியும் கெட்டுவிடும். சரி. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். ஒருவருடைய கனவில் இவையெல்லாம் வந்தால், கட்டாயமாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருந்து…

  Read More »
 • Photo of இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

  இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தை தங்களது வீடுகளின் இருந்து அனுட்டிக்குமாறு கிறிஸ்தவ மக்களிடம் கோரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கிறிஸ்தவ மக்களுக்கும், நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். “நாட்டு மக்கள் என்ற…

  Read More »
 • Photo of இன்று புனித வெள்ளி

  இன்று புனித வெள்ளி

  புனித வெள்ளி இன்றாகும்; வீட்டில் இருந்தே வழிபடவும் இன்றைய தினம் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி அல்லது ஆண்டவனின் திருப்பாடுகளின் வெள்ளி என கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து தான் அன்பவித்த துன்பங்களையும், அவரை சிலுவையில் ஏற்றியதை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் கிறிஸ்துவர்கள் ஆண்டுதோறும் வழிபடக் கூடிய மிக முக்கிய நாளாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் வழிபாடு செய்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் தற்போதைய…

  Read More »
 • Photo of பிதாவாகிய தேவனின் அன்பு – தவக்கால சிந்தனை

  பிதாவாகிய தேவனின் அன்பு – தவக்கால சிந்தனை

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமைப்பட்டுப்போன முழு மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார்.…

  Read More »
 • Photo of ‘நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்’ – கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல்!

  ‘நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்’ – கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல்!

  இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு 40 நாட்கள் உபவாசம் இருப்பது அவர்களின் வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி இன்று தவக்காலம் தொடங்கியுள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார்.…

  Read More »
 • Photo of இந்த உலோகத்தால் காப்பு அணிந்தால் வியக்க வைக்கும் பலன்கள்

  இந்த உலோகத்தால் காப்பு அணிந்தால் வியக்க வைக்கும் பலன்கள்

  கைகளில் அவரவர் விருப்பப்படி காப்பு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிலர் அதில் இருக்கும் நன்மையை அறிந்தபின் அணிந்திருப்பார்கள். சிலர் அதை ஒரு அலங்காரத்திற்காக மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் காப்பு அணிவது ஒரு தைரியத்தை வரவழைக்கும் என்ற நோக்கத்துடன் அணிந்து கொண்டிருப்பார்கள். வெவ்வேறு உலகங்களில் காப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒவ்வொரு உலகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. எந்த உலோகத்தாலான காப்பை அணிந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவில் நாம் விரிவாக காணலாம். செம்பு காப்பு: தாமிரம் அல்லது காப்பர்…

  Read More »
 • Photo of பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை இயங்க வைக்கும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நாள் தைத்திருநாளாம் முதல்நாள். சூரியனை ஆதவன், பகலவன், கதிரவன் என்ற பெயர்களிலும் அழைப்பதுண்டு. பொங்கல் திருவிழாவை உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்ற பெயரிலும் அழைக்கலாம். உழவுக்கு மரியாதை செலுத்தும் நாள். இறைவனை நினையாதவர்கள் கூட இந்நாளில் சூரியனை வழிபடுவார்கள்.…

  Read More »
 • Photo of காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

  காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

  நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் மட்டும் சிலருக்கு நிறைவேற்றப்படாமலே இருக்கும். அப்படியானால் நாம் வேண்டிக் கொள்ளும் விதத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதுதானே அர்த்தம். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இறைவனை நம்மால் வாங்கி விட முடியாது. ஆனால் ஆத்மார்த்தமான பக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும் அந்த இறைவன்…

  Read More »
 • Photo of ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

  ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

  ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று பிரித்து பகுப்பது இந்து மதத்தின் மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.…

  Read More »
 • Photo of மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

  மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

  மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16 ஆம் திகதி திறக்கப்பட்டு, தினசரி நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய விழாவான மண்டல பூஜை கடந்த 27ஆம் திகதி நடைபெற்றதை அடுத்து, அன்றிரவு ஹரிவராசனத்திற்குப் பின் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து, மகர விளக்கு பூஜைகளுக்காக நேற்று…

  Read More »
 • Photo of கருவறையில் ஊஞ்சலாடிய அந்தியூர் பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ!

  கருவறையில் ஊஞ்சலாடிய அந்தியூர் பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ!

  கர்த்திகை தீபத்தன்று கோவில் நடை சாத்திய பிறகு கருவறையில் அம்மன் ஊஞ்சலாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பக்தர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீப சிறப்பு வழிபாடுகள் முடிந்ததையடுத்து, கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில், பூசாரி புறப்பட்ட சென்ற சில மணி நேரத்திற்கு பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஊஞ்சலாடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

  Read More »
Back to top button
x
Close
Close