விளையாட்டு

 • Photo of சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை: கம்பிர்

  சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை: கம்பிர்

  டி20 கிரிக்கெட்டில் துடுப்பாட்ட பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டின் துடுப்பாட்ட கோச்சர் குறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டிக்கென மாறுபட்ட துடுப்பாட்ட பயிற்சியாளரை நியமிக்க முடியும். சர்வதேச அளவில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அல்லது போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் வெற்றிகரமான பயிற்சியாளராக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். இதில் உண்மையில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் செய்ய வேண்டியது உங்களது மனநிலையை சாந்தப்படுத்தி அமைதியாக வைத்திருத்தல்,…

  Read More »
 • Photo of கொரோனா தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டி ரத்து?

  கொரோனா தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டி ரத்து?

  கொரோனா வைரஸ் தொற்றை 2021ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தது. இதற்காக ஜப்பான் பல ஆயிரம் கோடி யென் செலவிட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவிய தொடங்கிய மார்ச் மாதத்தில், சர்வதேச விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களும் தந்த அழுத்தம் காரணமாக ஓராண்டுக்கு போட்டியை தள்ளி வைத்தது. 2021, ஜூலை…

  Read More »
 • Photo of ரசிகர்கள் இல்லாமல் இரண்டு F1 கார்ப் பந்தயங்கள்

  ரசிகர்கள் இல்லாமல் இரண்டு F1 கார்ப் பந்தயங்கள்

  இரண்டு F1 கார்ப் பந்தயங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் பந்தயத் தடம் முன்வந்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த ஆண்டிற்கான Formula one கார்ப் பந்தயங்கள் இன்னும் தொடங்கவில்லை. அதனால் இந்த ஆண்டு பந்தயங்கள் குறைக்கப்படும் அல்லது வேறு திகதிகளுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வேளையில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்தில் இரண்டு பந்தயங்களை ஒரே வாரத்தில் நடத்தலாம் அல்லது அடுத்தடுத்த வாரங்களில் நடத்தலாம் என்று அதன் தலைவர் ஸ்டூவர்ட் பிரிங்கல் (Stuart Pringle) விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு…

  Read More »
 • Photo of “கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார் தோனி”

  “கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார் தோனி”

  இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான 38 வயதுடைய மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில்…

  Read More »
 • Photo of தூக்கமே வராது… வேதனை தெரிவித்த பிரபல வீரர்

  தூக்கமே வராது… வேதனை தெரிவித்த பிரபல வீரர்

  தன்னுடைய தூக்கமில்லாத பல இரவுகளுக்கு இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவே காரணமாக இருந்ததாக ஆஸ்திரேலியாவின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் தலைவரான ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் அடங்கிய சர்வதேச ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். அணித்தலைவர் ஆரோன் பின்ச் சொற்ப ஓட்டங்களில் வெளியேறவும் காரணமாக இருந்தனர். 3 போட்டிகள்…

  Read More »
 • Photo of நாங்க முதல்ல வெளுக்கணும்.. டி காக் தெரிவிப்பு

  நாங்க முதல்ல வெளுக்கணும்.. டி காக் தெரிவிப்பு

  சீனியர்கள் முதலில் சிறப்பாக விளையாடினால்தான் ஜூனியர் வீரர்களுக்கு அது உத்வேகமாக இருக்கும் என தென்னாப்பிரிக்க அணித்தலைவர் குவின்டன் டி காக் கூறியுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தரம்சலாவில் இன்று தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக இது நடைபெறுகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் இது முதல் போட்டியாகும். இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தரம்சலா வந்து விட்டன. இப்போட்டியில் வெல்ல இரு அணிகளுமே பெரும் கவனமுடன் உள்ளன. ஒருபக்கம் கொரோனா மிரட்டல் இருந்தாலும் கூட ரசிகர்களும் சரி, வீரர்களும்…

  Read More »
 • Photo of செல்பி எடுக்காதீங்க.. கொரோனா வந்துரும்… வீரர்களுக்கு உத்தரவு

  செல்பி எடுக்காதீங்க.. கொரோனா வந்துரும்… வீரர்களுக்கு உத்தரவு

  இந்த கொரோனா வைரஸ் படுத்தும் பாடால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 7 முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதியாக இருக்கிறது. குறிப்பாக விளையாட்டு உலகை இது ரொம்பவே மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல போட்டித் தொடர்களை ரத்து செய்து விட்டனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது வீரர்களுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு வீரர்களுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வெளியில்…

  Read More »
 • Photo of ஆட்டமிழந்த வீரரரை கத்தி, கூச்சல் போட்டு வழியனுப்பிய கோலி… தடையில்’ சிக்குவாரா?

  ஆட்டமிழந்த வீரரரை கத்தி, கூச்சல் போட்டு வழியனுப்பிய கோலி… தடையில்’ சிக்குவாரா?

  நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற ரீதியில் இழந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தோல்வியின் வழியாக 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் விராட் கோலி நியூசிலாந்து அணியின் தலைவர் கனே வில்லியம்சனை…

  Read More »
 • Photo of ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்

  ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்

  31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று (01) இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 10000மீற்றர் ஓட்டப்போட்டியில் 10000 மீற்றர் தூரத்தை 35.16.10 நிமிடத்தில் ஓடிமுடித்து…

  Read More »
 • Photo of COVID-19 – இத்தாலியில் கால்பந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு

  COVID-19 – இத்தாலியில் கால்பந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு

  இத்தாலியில் ஏற்பட்டுள்ள COVID-19 கிருமித்தொற்று காரணமாக Serie A கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 5 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை மே மாதம் 13ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தாலியில் தற்போது 1,100க்கும் மேற்பட்டோர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகளிலும் கிருமித்தொற்று தொடர்பாக விளையாட்டாளர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸிலும் மக்கள் கூடும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க…

  Read More »
 • Photo of மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

  இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகெலே விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51…

  Read More »
 • Photo of இனி நம்பர் 1 கிடையாது.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோலி!

  இனி நம்பர் 1 கிடையாது.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோலி!

  ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் விராட் கோலியை முந்தி, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் படு மோசமாக செயல்பட்ட விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் பலத்த அடி வாங்கி இருக்கிறார். ஆஷஸ் தொடருக்கு பின் தவறவிட்ட முதல் இடத்தை மீண்டும் பிடித்து ஸ்டீவ் ஸ்மித் அசத்தி இருக்கிறார். பும்ரா, ஷமி ஆகியோரும் தரவரிசையில் சரிந்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது, இரண்டாம் இடத்தில் இருந்த கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்…

  Read More »
Back to top button
x
Close
Close