ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே முதல் இரு போட்டிகளில் விராட் கோலி விலகிய நிலையில், தற்போது மொத்தமாக டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
2வது டெஸ்டில் படுதோல்வி.. இந்தியாவை விட்டே புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து அணி.. அதிரடி முடிவு!
இதுகுறித்து விராட் கோலி ஏற்கனவே பிசிசிஐக்கு அறிவித்த நிலையில், விராட் கோலியின் முடிவுக்கு பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது.
அதேபோல் முதல் டெஸ்டில் காயமடைந்து விலகிய இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் உடற்தகுதி பொறுத்து களமிறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடி வரும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இளம் வீரர்களான சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், துருவ் ஜுரெல், கேஎஸ் பரத் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும், ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதேவேளை, 2வது போட்டியில் விலகிய சிராஜ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி
ரோகித் சர்மா, பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், சிராஜ் , முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஜடேஜா, துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.