முதல் ஓவரிலேயே இந்தியா படைத்த சரித்திரம் - இது போல நடந்ததே இல்லை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் முதல் ஓவரிலேயே இதுவரை இல்லாத வரலாறு படைக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் முதல் ஓவரிலேயே இதுவரை இல்லாத வரலாறு படைக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டி ஸ்ட்ரீமிங் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் பார்த்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதிய ஐபிஎல் இறுதிப் போட்டி. அப்போது இறுதிப் போட்டியில் 5.3 கோடி மக்கள் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் மூலம் அந்த போட்டியை கண்டனர்.
ஆனால் அந்தப் போட்டியின் முதல் ஓவரின் போது லட்சங்களில் தான் மக்கள் போட்டியை ஸ்ட்ரீமிங் மூலம் கண்டனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன 2023 உலகக்கோப்பை போட்டியின் முதல் ஓவரின் போதே ஸ்ட்ரீமிங்கில் 1.5 கோடி பேர் போட்டியை கண்டனர்.
எந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் முதல் ஓவரையும் இத்தனை கோடி பார்வையாளர்கள் பார்த்ததாக சரித்திரம் இல்லை. முதல் ஓவரிலேயே சரித்திரம் படைத்தது இந்தியா - பாகிஸ்தான் எட்டாவது முறையாக மோதிய உலகக்கோப்பை போட்டி.
நாணய சுழற்சியில் வெற்றி இந்தியாவுக்கு சாதகம்.. ஏன் தெரியுமா?
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அகமதாபாத் ஆடுகளம் சேஸிங் செய்ய சாதகமானது என்பதால் இந்த முடிவை எடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
பும்ரா முதல் ஓவரை வீசினார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். அந்த ஓவரை தான் 1.5 கோடி பேர் பார்த்தனர். அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகள் டாட் பால் ஆனது. கடைசி பந்தில் அப்துல்லா ஷபிக் ஃபோர் அடித்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டி ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. அதில் தான் முதல் ஓவரின் போதே 1.5 கோடி மக்கள் பார்த்தனர். போட்டி செல்ல எல்லா இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். நிச்சயம் இந்தப் போட்டியின் இறுதி ஓவரின் போது இந்த எண்ணிக்கை 6 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.