ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்கள் விளையாட மறுப்பு... மாற்று வீரர் தயார்... ஹர்திக் அதிரடி... ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை.
ஐபிஎல் 17ஆவது சீசன் துவங்க உள்ள நிலையிலும், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை வாங்கி, மும்பை அணிக்கு கேப்டனாக நியமித்த பிறகு, ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் ஆகியோர் வாழ்த்துகூட சொல்லவில்லை.
இதன்மூலம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில், ரோஹித், பும்ரா, சூர்யகுமார் போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவதுடன், மும்பை ரசிகர்கள் சிலரும் கேப்டன்ஸி மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
மும்பை அணிக்கு 2013-ல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, குறுகிய காலத்திலேயே அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்து அசத்தினார்.
தற்போது அவர் இந்திய அணிக் கேப்டனாக நிடிக்கும் நிலையில், ஐபிஎல் கேப்டன் பதவியை பறித்தது, சரியான முடிவு கிடையாது என பலர் கருதுகிறார்கள்.
அண்மையில், மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை.
சூர்யகுமார் தேசிய கிரிக்கெட் அகடமியில் பிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மற்ற இரண்டு வீரர்களும் பயிற்சிக்கு செல்லவில்லை.
இந்நிலையில், ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூன்று வீரர்களும் சொல்லி வைத்தார்போல, முதல் 5 லீக் ஆட்டங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு முதுகு வலி உள்ளதுடன், பும்ரா பிட்னஸுடன்தான் இருக்கிறாராம். இருப்பினும், ஓய்வு தேவைப்படுவதால் விலகுவதாக தெரிவித்துள்ளாராம்.
சூர்யகுமார் இந்த வாரத்தில் முழு பிட்னஸை எட்டிவிடுவார் எனக் கூறப்படும் நிலையில், அவரும் ஓய்வுக்காக விலக உள்ளதாக கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை காரணமாக, என்னால் முழு உழைப்பையும் போட்டு விளையாட முடியாது, பயிற்சி வகுப்பில் விளையாடுவது போல்தான் விளையாட முடியும் என ரோஹித் கூறிவிட்டதால், அவருக்கு மாற்றான வீரரை மும்பை அணி, தேர்வு செய்து வைத்துள்ளதாம்.
ஒருவேளை, ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால், இஷான் கிஷனுடன் டிவோல்ட் பிரேவிஸை ஓபனராக களமிறக்க மும்பை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.