ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர்தான்'.. கோலி மற்றும் நிர்வாகம் அதிரடி முடிவு!
மேக்ஸ்வெல் ஐபிஎலில் சிறப்பாக சோபிக்காத நிலையில், இந்த தகவலை தொடர்ந்து, பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 17ஆவது சீசனின் முதல் 8 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று அசத்தியது. இதனால், நெட் ரன்ரேட்டும் உயர்ந்து, பிளே ஆப் வாய்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
ஆர்சிபி அணி, 13 லீக் வரை கடைசி 5 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்றதால், அந்த அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகள், +0.387 நெட் ரன்ரேட்டுடன் 5ஆவது இடத்தை பிடித்தது.
ஆர்சிபி அணி, இப்படி திடீரென்று அசுர பார்முக்கு திரும்பியது, சிஎஸ்கேவுக்குதான் பெரிய பிரச்சினையாக மாறியது. இரு அணிகளும் சந்திக்கும் கடைசி போட்டிதான், பிளே ஆப் சுற்றின் 4ஆவது இடத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.
சிஎஸ்கேவுக்கு எதிரான கடைசி போட்டியில், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ, சிஎஸ்கேவை 5ஆவது இடத்தில் தள்ளி, ஆர்சிபி அணி 4ஆவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில், ஆர்சிபி அணி 218 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 191 ரன்களில் சுருட்டி, 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
மொத்தம், 9ஆவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணி, மீண்டும் கோப்பையை வெல்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று வெளியேறியது.
ஆர்சிபி அணிக் கேப்டன் டூ பிளஸிக்கு 39 வயதாகிறது. இதனால், மெகா ஏலத்திற்கு முன் இவரை தக்கவைக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், டூ பிளஸிக்கு மாற்றாக கிளென் மேக்ஸ்வெலை கேப்டனாக நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேக்ஸ்வெல் ஐபிஎலில் சிறப்பாக சோபிக்காத நிலையில், இந்த தகவலை தொடர்ந்து, பலரும் கலாய்த்து வருகிறார்கள்.