இன்று புரட்டாசி சனி.. இன்று இதை செய்வது சிறப்பு தரும்!

Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை.  இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்று புரட்டாசி சனி.. இன்று இதை செய்வது சிறப்பு தரும்!

Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை.  இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் எழுந்தருள்வார். அதனால் இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுதான் இந்த புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்.

தளியை போடும் சனி

இந்த ஆண்டு எந்தெந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளியை இடலாம் என்று பார்க்கலாம். இந்த ஆண்டு புரட்டாசியில் 4 சனிக்கிழமைதான். பொதுவாக முதல் சனி, 3 ஆவது சனி, 5 ஆவது சனிக்கிழமை வந்தால் அன்றும் தளியை இட்டு வழி படலாம். இடையில் வரும் சனிக்கிழமை கூட வாய்ப்புள்ளவர்கள் செய்யலாம். ஆனால் இந்த ஆண்டு இரண்டு நாட்கள்தான் கிடைத்துள்ளது.

முதல் அல்லது 3 ஆவது தான் சனிக்கிழமைதான் செய்ய முடியும். இந்த ஆண்டு 2ஆவதுசனியில் மகாலய பட்சம் துவங்கியது. 4 ஆவது சனியில் மகாலய பட்ச அமாவாசை வருகிறது.

தேதி நேரம்

இந்த ஆண்டு புரட்டாசியில் 23.9.2023, 30.9.2023, 7.10.2023, 14.10.2023 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை உள்ளது. இதில் முதல் சனிக்கிழமை முடிந்து விட்டது. இன்று 7ம் தேதி. இன்று மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்கு தளியை இட்டு வழிபடலாம்.

உணவுகள்

சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளிசாதம், லெமன் சாதம், நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், கருப்பு சுண்டல், வெங்காயம் சேர்க்காத உளுந்து வடை, பானகம், மாவிளக்கு போன்ற உணவுகளை வைத்து தளிகை இடலாம். மாவிளக்கு, சாம்பார் சாதம், பழங்கள் மாதுறை முத்துக்கள் திராட்சை போன்றவை வைத்து வழிபட விரும்புபவர்கள் செய்யலாம்.

வழிபாட்டு முறை

நாராயணர் படத்தை நன்றாக சுத்தம் செய்து துளசி, சம்மங்கி, சாமந்தி, தாமரை உள்ளிட்டவற்றால் அலங்கரித்து 3 இலை போட்டு வழிபாடு தளிகை சாதத்தை வைத்து வழிபடலாம். வாய்ப்பு உள்ளவர்கள் செய்த சாதங்களை பெருமாளின் முகம் போல் அலங்கரித்து கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லி மனதார வழிபாடு செய்யலாம். அந்த சாமி வைத்த மனையில் சிறிய விநாயகர் அல்லது மஞ்சள் விநாயகர் பிடித்து வைக்கலாம். குல தெய்வத்தை மனதில் நினைத்து இந்த வழிபாடு செய்வது வாழ்வில் தடங்கல்கள் நீங்கி பல்வேறு நன்மைகள் கிட்ட வழிவகை செய்யும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளவும்.)

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp