டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்த மெகா சாதனை.. இவர்தான் முதல் வீரர்!

2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்த மெகா சாதனை.. இவர்தான் முதல் வீரர்!

2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.

சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிற நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்த இந்திய அணி சார்ப்பில் களமிறங்கிய ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த  ரோகித் சர்மா, மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 6,6,4,6,6 என்று மொத்தமாக 29 ரன்களை விளாசினார். அதன்பின் ரோகித் சர்மாவிடம் கம்மின்ஸ் சிக்கிய நிலையில், கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ரோகித் சர்மா 100 மீட்டர் தூரம் சென்ந  சிக்சரை விளாசினார்.

இந்த சிக்சரை விளாசியதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 

150 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 200 சிக்சரை விளாசி அசத்தியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்க, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 118 இன்னிங்ஸ்களில் விளையாடி 173 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 113 இன்னிங்ஸ்களில் விளையாடி 137 சிக்சர் விளாசி 3வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 103 இன்னிங்ஸ்களில் விளையாடி 133 சிக்சர்களுடன் 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் 87 இன்னிங்ஸ்களில் 132 சிக்சர்களை விளாசி 5வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...