முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா செய்த சாதனை.. ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட நிலை!

அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா செய்த சாதனை.. ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட நிலை!

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக 400 ரன்களுக்கு மேல் விளாசி உள்ள நிலையில், இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதுடன், 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்களை குவித்துள்ளது.

அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் இடையிலான 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதுடன்,  2015ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக சொந்த மண்ணில் நடக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடந்துள்ள 11 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி ஒருமுறை கூட 400 ரன்களை எட்டியதில்லை என்பதால்,  தற்போது இந்திய அணியின் பவுலிங் மற்றும் கேப்டன்சி எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

2004ஆம் ஆண்டுக்கு பின் ஜாகீர் கான் எப்படி தனியாளாக போராடினாரோ, அப்படி தான் மீண்டும் பும்ரா மட்டும் போராடி வருகிறார். அதேபோல் ரோஹித் சர்மாவும் கேப்டன்சியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். 

ட்ராவிஸ் ஹெட்டை சமாளிக்க எந்த திட்டமும் இல்லாமல், அவராகவே விக்கெட்டை கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் ட்ராவிஸ் ஹெட் பொளந்து கட்டும் போது, அவரை வீழ்த்த குறைந்தபட்சம் 2 திட்டங்களுடன் வந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் 2 பவுண்டரிகளை அடித்தால் கூட உடனடியாக டிஃபென்சிவ் ஃபீல்ட் செட்டப்பை ரோஹித் சர்மா அமைத்துவிடுகிறார். அதேபோல் பவுலர்களுடன் எந்த ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரிடமும் ஃபீல்டிங்கை எப்படி அமைப்பது, ஃபீல்ட் செட்டப்பிற்கு ஏற்ற திட்டத்தை பவுலர்களை வைத்து எப்படி செயல்படுத்துவதை என்பதை ரோஹித் சர்மா கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் ரஹானே கடந்த முறை ஆஃப் சைடில் ஃபீல்டரையே நிறுத்தாமல், லெக் ஸ்டம்ப் திசையில் ஃபீல்ட் அமைத்து பவுலர்களுக்கு திட்டத்தை அளித்தார். பாடி லைன் திட்டத்தை செயல்படுத்தியே வெற்றிகளை குவித்ததை ரோஹித் சர்மா அறிந்து கொள்ள வேண்டும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp