இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்: வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்: வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

இந்திய அணியில், 15 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது . ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திடீரென 5 முக்கிய வீரர்களை கழற்றிவிடும் சிஎஸ்கே: ஸ்டார் பௌலருக்கும் ஆப்பு?

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு புதுக் கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே, பிசிசிஐயில் மும்பை கேங்கின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், ஷார்ட் பால்களுக்கு எதிராக படுமோசமாக தடுமாறும் மும்பையை சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp