நிகழ்ச்சியில் சந்தித்த காதல் ஜோடி.. சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர்!
மும்பையில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும்.
இதனால் இந்திய அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் ரோகித் சர்மா களமிறங்குவதால், அவரின் ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மும்பையில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மும்பையில் முகாமிட்டுள்ள ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் ஜியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவருடன் சாரா டெண்டுல்கரும் கலந்து கொண்டுள்ளார்.
ஜியோ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளே சென்ற போது அனைவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அதேபோல் வெளியே வந்த போது கேமராவின் கண்களில் இருந்து யாராலும் தப்ப முடியவில்லை.
இந்த நிலையில் சுப்மன் கில் வெளியே வந்த போது அவர் அருகில் சாரா டெண்டுல்கரும் இருந்தார். வெளியில் கேமராக்கள் இருப்பதை அறிந்த சுப்மன் கில், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை புறக்கணித்தார்.
சிறிது நேரம் வாசலுக்கு முன் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதன் பின் சுப்மன் கில் முன் வந்து காரில் ஏற, அவருக்கு பின் சாரா டெண்டுல்கர் காரில் ஏறி சென்றனர்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் சூழலில், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனால் இவர்களின் காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை இவர்கள் இருவரும் பெரிதாக வெளியில் சந்திக்காமல் இருந்த நிலையில், அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியை காண சாரா டெண்டுல்கர் நேரில் வந்தார்.
தற்போது ஜியோ நிகழ்ச்சியில் சுப்மன் கில்லுடன் பங்கேற்றுள்ளார். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் ஒரேயொரு அரைசதம் உட்பட வெறும் 104 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.