17 பந்தில் 52 ரன்கள்.. புதிய உச்சத்தை தொட்ட சூர்யகுமார் யாதவ்... கொண்டாடிய ரசிகர்கள்!

காயத்துக்கு பின் அதே பழைய ஃபார்மில் இருப்பதை நிரூபித்த அவர், 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்.

17 பந்தில் 52 ரன்கள்.. புதிய உச்சத்தை தொட்ட சூர்யகுமார் யாதவ்... கொண்டாடிய ரசிகர்கள்!

பல மாதங்களுக்கு பின் களத்துக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டார். 

காயத்துக்கு பின் அதே பழைய ஃபார்மில் இருப்பதை நிரூபித்த அவர், 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்த்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி பெரிய வெற்றியை பெற்றது.

இஷான் கிஷன் 34 பந்துகளில் 71 ரன்களும், ரோஹித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் குவித்தனர்.  5 நான்கு ஓட்டங்கள், 4  ஆறு ஓட்டங்கள் என விளாசிய சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவின் அதிவேக அரைசதம் இதுவாகும்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் மூன்று போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு ஃபார்முக்கு திரும்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp