உலகக்கிண்ண இந்திய அணியுடன் கோலி பயணிக்கவில்லை... ஏன் தெரியுமா?
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில், ரிங்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ரிசர்வ் வீரர்கள் பட்டியலில், எப்போது வேண்டுமானாலும் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள், ரிசர்வ் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும், மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த குழுவில் விராட் கோலி இடம்பெறவில்லை.
விராட் கோலி, 29ஆம் தேதிவரை தனது குடும்பத்துடன் இருந்துவிட்டு, மே 30ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். ஆனால், கோலிக்கு விசா கிடைக்கவில்லை என பிசிசிஐ கூறி உள்ளது.
கோலி மே 30ஆம் தேதி செல்ல உள்ளதால், ஜூன் 1ஆம் தேதி, வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.