ஐக்கிய தேசியக் கட்சி

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வேட்பாளரைத் தெரிவு செய்வது செயற்குழுவென்பதால், செயற்குழு கூடி விரைவில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனுக்குடன்...

‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளின்...

‘ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை’

ஒரே நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண வடக்கு கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர்...

அமைச்சர் சஜித்தின் குருநாகல் பேரணிக்கு கட்சித்தலைவர் தடை?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருநாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பேரணியை நடத்த வேண்டாம் என, கட்சியின் தலைவர் ஊடாக ஏற்பாட்டு குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கட்சி தலைவரின் ஆலோசனையை பின்பற்றாமல்...

ஜனாதிபதி வேட்பாளரை ஏழு நாள்களுக்குள் தெரிவுசெய்யுமாறு கடிதம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அவ்வாறானதொரு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்தார். கட்சியின் நாடாளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் கூட்டி, ஜனாதிபதி வேட்பாளர்...

ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலரிமாளிகையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. நாடாளுமன்ற குழுக் கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித்...

சஜித்தை களமிறக்க வேண்டும்: திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட வேண்டுமென அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை சஜித் வடிவமைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு காண்பபடுவதாகவும், ஆகவே சரியான தீர்மானம் ஒன்றை...

சஜீத் பிரேமதாசவுக்கு பதுளையில் அமோக வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, சற்று முன்னர் பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியது. சஜீத் பிரேமதாச, வில்ஸ் பார்க் மைதானத்தை வந்தடைந்த நிலையில் பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த பேரணியில் அதிகளவான பொதுமக்கள் கூடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

‘வேட்பாளரை பெயரிட்ட பின்னரே புதிய கூட்டணி’

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாடின்றி பின்வரிசை எம்.பிக்களின் கலந்துரையாடல் நிறைவு

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஒன்றுகூடி இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் கூறியுள்ளார்.
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...