நுவரெலியா

 • இலங்கை
  Photo of மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

  மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

  ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (23) பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என…

  Read More »
 • இலங்கை
  Photo of 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

  10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

  10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலி, கேகாலை, மாத்தளை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை அமுலில் இருக்கும் என, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo…

  Read More »
 • இலங்கை
  Photo of மலையகத்தின் பிரதான நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே வருகை

  மலையகத்தின் பிரதான நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே வருகை

  பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (28) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகை தந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். எனினும், அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர். தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 3 அல்லது 4 இருப்பவர்களையே, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அந்த நடைமுறையை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை. அதேபோல் பொது போக்குவரத்தின் போது எவ்வாறு செயற்படவேண்டும் என விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களையும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கவில்லை. ஒரு…

  Read More »
 • இலங்கை
  Photo of கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து; மூவர் வைத்தியசாலையில்

  கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து; மூவர் வைத்தியசாலையில்

  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வான் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறு குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ் கிரீம் வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான…

  Read More »
 • இலங்கை
  Photo of இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு… தாய்க்கு வலைவீச்சு

  இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு… தாய்க்கு வலைவீச்சு

  நுவரெலியா, நேஸ்பி தோட்டத்தில் இருந்து இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து ஒரு நாளேயான சிசுக்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண் சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளனர். அதனையடுத்து, அங்கிருந்த பொதியொன்றை சோதனையிட்டபோது, பொதிக்குள்ளிருந்த மற்றுமொரு பெண் சிசுவின் சடலமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிசுக்களை பிரசவித்த தாய் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில், சிசுவின் சடலங்களை 14 நாட்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைப்பதற்கு நடவடிக்கை…

  Read More »
 • இலங்கை
  Photo of குறிப்பிட்ட பகுதிகளில் ஆயுதப்படைகளை நிறுத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

  குறிப்பிட்ட பகுதிகளில் ஆயுதப்படைகளை நிறுத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

  பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள…

  Read More »
 • இலங்கை
  Photo of நானுஓயா சமர்செட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

  நானுஓயா சமர்செட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்டப்ட்ட தலவாக்கலை, நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (19) இரவு 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்கும் இடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில்…

  Read More »
 • இலங்கை
  Photo of நுவரெலியாவில் குளவி தாக்குதல்; 42 மாணவர்கள் வைத்தியசாலையில்

  நுவரெலியாவில் குளவி தாக்குதல்; 42 மாணவர்கள் வைத்தியசாலையில்

  நுவரெலியா நகரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற குளவி தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் 42 பேர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் வீசிய பந்தொன்று அங்கிருந்த குளவிக்கூட்டில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் காணப்படும் குளவிக்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நுவரெலியா வனஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நுவரெலியாவில் ஒன்பது இந்திய…

  Read More »
 • இலங்கை
  Photo of பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

  பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

  சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

  Read More »
 • இலங்கை
  Photo of நுவரெலியாவில் சீரற்ற வானிலை; சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

  நுவரெலியாவில் சீரற்ற வானிலை; சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

  நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் பனி மூட்டம் காணப்படும் நிலையில், வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார், சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, கடவல, வட்டவலை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் காணப்படுகின்றது. அத்துடன், ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, தலவாக்கலை, கொட்டகலை, ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்க வீதியில் பனிமூட்டம் நலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

  Read More »
 • இலங்கை
  Photo of ‘ட்ரோன்’ பறக்க விட்டவர் நுவரெலியாவில் கைது

  ‘ட்ரோன்’ பறக்க விட்டவர் நுவரெலியாவில் கைது

  நுவரெலியாவில் ட்ரோன் கெமராவை பயன்படுத்தி காணொளி காட்சிகளை பதிவுசெய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியாவை அண்மித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே நேற்று (01) இவர் கைது செய்யப்பட்டதாக நுவரொலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் எந்த அனுமதிப்பத்திரமும் இன்றி இவ்வாறு ட்ரோன் கெமராவை இயக்கியுள்ளதுடன், காணொளி காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபர் நீதவான்…

  Read More »
 • இலங்கை
  Photo of நாளையதினம் பரீட்சை எழுதவிருந்த மாணவன் மண்சரிவால் குடும்பத்துடன் உயிரிழப்பு

  நாளையதினம் பரீட்சை எழுதவிருந்த மாணவன் மண்சரிவால் குடும்பத்துடன் உயிரிழப்பு

  நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல் தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாய், தந்தை, மற்றும் பெண் பிள்ளை, மகன் ஆகியோர் அடங்குவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30…

  Read More »
Back to top button
x
Close
Close