விஷ்ணுவுக்கும் மாயாவுக்கும் முற்றிய வாக்குவாதம்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7ல் கூல் சுரேஷுக்கும் மாயாவுக்கும் நடந்திருக்க வேண்டிய வாக்குவாதம் விஷ்ணுவுக்கும் மாயாவுக்குமான வாக்குவாதமாக மடைமாறியது.
பிக்பாஸ் 7ல் கூல் சுரேஷுக்கும் மாயாவுக்கும் நடந்திருக்க வேண்டிய வாக்குவாதம் விஷ்ணுவுக்கும் மாயாவுக்குமான வாக்குவாதமாக மடைமாறியது.
பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த சில நாட்களிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்சன், வினுஷா, ரவீனா, ஐஷு, அனன்யா ஆகிய ஆறு பேர் முதலில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
அதனையடுத்து ரூல்ஸை மீறியதற்காக விசித்திராவும், யுகேந்திரனும் அங்கு அனுப்பப்பட்டனர். இதனால் மொத்தம் 8 பேர் ஸ்மால் பாஸ் வீட்டில் இப்போது இருக்கின்றனர்.
ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது என்ற ரூல் இருப்பதால் மீதம் இருக்கும் 10 பேருக்கு வீக்லி டாஸ்க் வழங்கப்பட்டது.
அதன்படி வீட்டில் இருப்பவர்களை பற்றி 3 கிசுகிசுக்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த மூன்று உண்மை நிகழ்வுகள் டிவியில் டிஸ்ப்ளே ஆகும். அதில் ஒருவரை செலக்ட் செய்து அவர்கள் தொடர்பாக டிஸ்ப்ளே ஆனதில் மூன்று விஷயங்களை வைத்து கற்பனையாக ஒரு கதையை சொல்ல வேண்டும்.
யார் சொல்லும் கதை ஹவுஸ்மேட்ஸில் அதிகம் பேருக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அவர்களுக்கு கோல்டு ஸ்டார் தரப்படும்.
அதிகபட்சம் ஐந்து கோல்டு ஸ்டார்கள் இருந்தால் அதை வைத்து 10ஆவது வாரம் எந்த வாரத்தில் வேண்டுமானாலும் நாமினேஷன்களில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சரவண விக்ரம் கூல் சுரேஷ் சம்பந்தமாக சொன்ன கதை ஹவுஸ்மேட்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் இந்த வீக்லி டாஸ்க்கில் வென்றார்.
டாஸ்க்கை முடித்த பிறகு ஒரு உரையாடலின்போது மாயாவிடம் சென்ற கூல் சுரேஷ் 'மூத்த பொண்ணு மாதிரி இருந்த இப்போ பீத்த பொண்ணு மாதிரி இருக்க' என்று கூறினார். அதை பிடிக்காத மாயா இப்படி பேசாதீர்கள் என்றார்.
பிறகு, இல்ல ம்மா மாத்தி மாத்தி சொன்னேன் என்று சுரேஷ் சமாளித்தார். ஆனால் சமாதானம் ஆகாத மாயா அதெல்லாம் தப்பு அந்த வார்த்தையை சொல்லாதீங்க என்று கறாராக கூறினார். சிறிது நேரம் கழித்து விஷ்ணுவும், கூல் சுரேஷும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது வந்த மாயா; கூல் சுரேஷிடம் எதற்காக துண்டு கேட்க வந்தபோது எதற்காக இண்ட்டிமேட்டாக பார்த்தீர்கள் எதாவது பிரச்னையா என்று கேட்டார். அதற்கு கூல் சுரேஷ் வழக்கம்போல் ஜாலியாக கடந்து சென்று விஷ்ணுவிடம் தனது சொந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.
சில நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்த மாயா கூல் சுரேஷிடம் உங்கள்ட்டதான் கேக்குறேன். ஏன் இண்ட்டிமேட்டாக பார்த்தீங்க என மீண்டும் மீண்டும் கேட்க கூல் சுரேஷும் விஷ்ணுவும் மாயாவை கண்டுகொள்ளவில்லை. பிறகு மாயா அவர்களிடம் ரொம்ப அவாய்ட் செய்றீங்க என்று கூறி அங்கிருந்து கிளம்பும்போது பூர்ணிமா அந்த இடத்துக்கு வந்தார்.
அதனையடுத்து கூல் சுரேஷுக்கும் தனக்கும் நடந்ததை விவரித்துவிட்டு சென்றார். அந்த சமயத்தில் அவ்வளவு சீன்லாம் இல்லை என்று பூர்ணிமாவிடம் சொல்ல விஷ்ணு உள்ளே புகுந்து நீங்கள்தான் சீன் போடுறீங்க என கூற கூல் சுரேஷ் - மாயாவுக்கான பிரச்னை விஷ்ணு - மாயாவுக்கான பிரச்னையாக மடை மாறியது.
ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றிப்போக அந்த இடத்திலிருந்து மாயா சென்றுவிட்டார். ஆகமொத்தம் பிக்பாஸ் 7ல் போட்டியாளர்களுக்குள் அடுத்தக்கட்ட சண்டை ஆரம்பித்திருக்கிறது. இது எப்படியெல்லாம் செல்லுமோ பொறுத்திருந்து பார்ப்போம்.