இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு QR நடைமுறை?
இஸ்ரேல் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் தொடர்பில் தற்போது குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் தொடர்பில் தற்போது குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், இலங்கைக்குள் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது இதற்கான தீர்வாக அமையாது என்றும், மீண்டும் எரிபொருளுக்கான QR நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பல நாடுகளுக்கு இடையிலான யுத்தங்கள், வானிலை, எரிபொருள் விநியோகத்திற்கான காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைகின்றமை உள்ளிட்டவை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.